மிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலர் மீது... ‘"வாய்ப்புத் தர்றதாச் சொல்லி என்னை செக்ஸுக்கு பயன்படுத்திக்கிட்டு, வாய்ப்புத் தராம ஏமாத்திட்டாங்க'’என அதிரடி குற்றச்சாட்டுகளைச் சொல்லி அலறவிட்ட நடிகை ஸ்ரீரெட்டி... “"கோலிவுட்டிலேயே தங்கி படங்களில் நடிக்கப்போறேன். முதல் படம் என் வாழ்க்கை சம்பந்தப் பட்ட கதையாக "ரெட்டி டைரி' என்ற பெயரில் தயாராகுது'’என அறிவித்தார்.

Advertisment

touringtalkiesஆனால்... படவேலைகள் நடப்பதாகத் தெரியவில்லை.

ஆனாலும் ஸ்ரீரெட்டி இன்னொரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். "அது பிளாக் மெயில் பண்ணுவதற்குச் சமமானது...' என சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

"குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக வெளியே சொல்லி, அதன்மூலம் ஸ்ரீரெட்டி பலன் அடை கிறார்' எனச் சொல்லப் படுகிறது.

Advertisment

ஸ்ரீரெட்டியின் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ்... "உங்க ளுக்கு திறமையிருந்தால் ஒரு வீடியோவில் நடித்து அனுப்புங் கள். பிடித்திருந்தால் எனது அடுத்த படத்தில் வாய்ப்புத் தருகிறேன்'’எனச் சொன்னார்.

ராகவா லாரன்ஸை அவரது வீட்டிலேயே சந்தித்த ஸ்ரீரெட்டி, நடன மாடிக் காண்பித்தார்.

இதையடுத்து, தனது அடுத்த படத்தில் ஸ்ரீரெட்டிக்கு முக்கிய கேரக்டர் தருவதாகச் சொல்லி, அதற்கான சம்பளத்திலிருந்து அட்வான்ஸாக ஒரு தொகையையும் ஸ்ரீரெட்டிக்கு கொடுத்து அனுப்பினார் ராகவா லாரன்ஸ்.

Advertisment

தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகர்களில் ஒருவர் ராஜேந்திர பிரசாத். இவர் தமிழில் கஸ்தூரிராஜா டைரக்ஷனில் "வாசுகி'’என்கிற படத்திலும் நடித்திருக்கிறார்.

நகைச்சுவை கலந்த, குடும்பக்கதை படங்களின் ஹீரோவாக, தெலுங்கு ரசிகர் களிடையே பிரபலமாக இருக்கும் ராஜேந்திர பிரசாத் மீது 15 வருடங்களுக்கு முன் ஒரு பகீர் குற்றச்சாட்டை கூறியிருந்தார் நடிகை மாளவிகா.

"இருவரும் இணைந்து "அப்பாராவ் டிரைவிங் ஸ்கூல்'’என்ற படத்தில் நடித்தபோது... “படுக்கையறைக் காட்சி ஒன்றிலும், முத்தக் காட்சி ஒன்றிலும் என்னிடம் சில்மிஷம் செய்தார். தப்பாக நடந்துகொள்ள முயன்றார். ஒரு சீனியர் ஹீரோ, தன்னைவிட வயதில் மிகவும் சிறிய பெண்ணான என்னிடம் இப்படி எல்லை மீறலாமா?'’என மாளவிகா குற்றம்சாட்டியது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஸ்ரீரெட்டி, சினிமா பிரபலங்களின் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு... “"பைத்தியக்காரத்த னமான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்'’என கருத்துச் சொன்னார் ராஜேந்திர பிரசாத்.

இதனால் கோபமான ஸ்ரீரெட்டி, "ராஜேந்திர பிரசாத் உடனடியாக ஒரு மனநல டாக்டரை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது'’எனச் சொன்னதுடன்... "விரைவில் உங்களுடைய லீலைகளையும் அம்பலப்படுத்து வேன்'’எனச் சொன்னார்.v என்ன நடந்ததோ...?

இப்போது ராஜேந்திர பிரசாத்தின் படம் ஒன்றில் ஸ்ரீரெட்டி நடிக்கவிருக்கிறார்.

"நான் தெலுங்கு சினிமா உலகத்துடன் சண்டை போட்டதற்குப் பிறகு... முதன்முதலாக தெலுங்குப் படத்தில் நடிக்கிறேன். ராஜேந்திர பிரசாத் காருவுடன் வொர்க் பண்ணப்போறேன்'’’ என சந்தோஷமாக சொல்லியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

"நான் ஈ'’நானி, பெரிய ஹீரோ ஆவதற்கு முன்... "நான் சினிமாவில் ஹீரோவான பிறகு எனக்கு ஜோடியாக உன்னை நடிக்க வைப்பேன்'’எனச் சொல்லி... தன்னை பாலியல் ரீதியாக பலமுறை பயன்படுத்திக் கொண்டதாக குற்றம் சொன்னார் ஸ்ரீரெட்டி.

இந்த குற்றச்சாட்டை மறுத்ததுடன், "ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்'’ எனவும் தெரிவித்தார் நானி. ஆனால் அவர் சட்ட நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

"ராகவா லாரன்ஸ் போல... ராஜேந்திர பிரசாத் போல... நானியும் சமரசத்துக்கு வந்து தனக்கு பலன் அளிப்பார்...' என எதிர்பார்த்திருந்த ஸ்ரீரெட்டிக்கு, நானி சமரசத்திற்கு வராதது எரிச்சலை உண்டாக் கியதோ... என்னவோ.... "நானிக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்லை. ஒருநாள் போதையில், கையில் மதுபாட்டிலுடன் என் வீட்டுக்கு வந்து, என்னை பாலியல் உறவுக்கு வற்புறுத்தினார். ஆனால் நான் நானியை திட்டி அனுப்பிவிட்டேன்'’ என மீண்டும் நானிமீது குற்றம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

த்ரிஷாவும், ‘"பாகுபலி'’ராணா டகுபதியும் சிறுவயது முதல் நண்பர்கள்... பிறகு காதலர்கள் ஆனார்கள். பிறகு பிரிந்துள்ளார்கள். இது பரவலாக எல்லோருக்கும் தெரியும். ராணா டகுபதியின் தம்பி அபிராம் டகுபதி தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஏற்கனவே வெளியிட்ட ஸ்ரீரெட்டி... மீண்டும் அந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

ராணாவின் தாத்தா மறைந்த ராமாநாயுடு, சினிமா ஜாம்பவான். அவர் களின் குடும்பமும் சமரசத்துக்கு வராததால்... த்ரிஷா வுக்கு ராணா டகுபதி முத்தம் தரும் புகைப்படத்தையும், தனக்கு அபிராம் டகுபதி முத்தம் தரும் புகைப்படத் தையும் சேர்த்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. பாதிக்கப்பட்ட ஸ்ரீரெட்டி சட்ட பரிகாரம் தேடாமல்... பலனடையும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.

-ஆர்.டி.எ(க்)ஸ்